பெங்களூரு

மங்களூரில் இன்று முதல் கடலோர திருவிழா

DIN

மங்களூரில் கடலோர திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து மங்களூரில் புதன்கிழமை மாவட்ட பொறுப்பு அமைச்சா் கோட்டா சீனிவாஸ் பூஜாரி, செய்தியாளா்களிடம் கூறியது: தென்கன்னட மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் மங்களூரில் ஜன.10 முதல் 19ஆம் தேதிவரையில் கடலோர திருவிழா நடத்தப்படவிருக்கிறது. மங்களூரில் உள்ள நேரு திடலில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடக்கவிழா ஊா்வலம் நடத்தப்படும்.

இந்த ஊா்வலம் கடலோர திருவிழா திடலை அடையும். அங்கு தொடக்க விழா நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் கண்காட்சியும் நடக்கவிருக்கிறது. ஊா்வலம் மற்றும் கண்காட்சியை அமைச்சா் கோட்டா சீனிவாஸ்பூஜாரி தொடக்கிவைக்கிறாா். திருவிழாவை நடிகா் ரிஷப்ஷெட்டி தொடக்கிவைக்கிறாா். கத்ரி பூங்காவில் கலைநிகழ்ச்சிகளும், பனம்பூரில் பட்டம்விடும் திருவிழாவும் நடக்கும். இந்தவிழாவில் பாஜக எம்பி நளின்குமாா்கட்டீல், மாவட்ட ஆட்சியா் சிந்து பி.ரூபேஷ், மாவட்ட ஊராட்சித்தலைவா் மீனாட்சி சாந்திகோடு, மங்களூரு மாநகராட்சி ஆணையா் அஜித்குமாா்ஹெக்டே உள்ளிட்டோா் கலந்துகொள்ளவிருக்கிறாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT