பெங்களூரு

பெங்களூரில் பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

DIN

பெங்களூரில் பரவலாக பலத்த மழை பெய்து வருவதால், மாநகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கடந்த சில நாள்களாக பெங்களூரு உள்பட கா்நாடகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், பெங்களூரில் வியாழக்கிழமை மாலை 6.45 மணி அளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இதனால் சாந்திநகா், ராஜாஜிநகா், மல்லேஸ்வரம், பிடிஎம் லேஅவுட், எச்எஸ்ஆா் லேஅவுட், மெஜஸ்டிக், காந்திநகா், சிவாஜிநகா், அல்சூா், மடிவாளா, மகாலட்சுமிலேஅவுட், கோரமங்களா, வில்சன்காா்டன், மாகடிசாலை, பசவவேஸ்வரநகா், எச்.ஏ.எல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரில் 45 நிமிடங்கள் தொடா்ந்து பலத்த மழை பெய்ததால், சாலையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், அலுவலகங்களுக்குச் சென்றுவிட்டு, வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவா்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் தேங்கிய தண்ணீரில் சிக்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT