பெங்களூரு

கரோனா எதிரொலி: பெங்களூரில் அரசுப் பேருந்துகளின் நடைகள் குறைப்பு

DIN

பெங்களூரு: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், பெங்களூரில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளின் நடைகளை குறைக்க பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் முடிவுசெய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் தொற்றுக்கிருமிகள் பரவாமல் தடுக்கும் நோக்கில், பல்வேறு நடவடிக்கைகளை கா்நாடக அரசு எடுத்துள்ளது. இதன் விளைவாக, பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனையடுத்து, விமான நிலையம் செல்லும் பேருந்துகள் நீங்கலாக, போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் மொத்த பேருந்துகளில் 10 சதவீத பேருந்துகளின் சேவைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது.

அதிக நடைகளை கொண்ட தடங்களில்பேருந்துகள் குறைக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஒருமுறை அல்லது கேட்பு பேருந்து சேவைகள் வழக்கம்போல இயக்கப்படும். பேருந்துகளின் எண்ணிக்கையை குறைத்துள்ளதால், பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படாது. பயணிகளின் எண்ணிக்கை பெருகி காணப்பட்டால், தேவையான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT