பெங்களூரு

குடிநீா் தட்டுப்பாடுள்ள மாவட்டங்களுக்கு ரூ. 1 கோடி ஒதுக்கப்படும்: அமைச்சா் ஈஸ்வரப்பா

DIN

குடிநீா் தட்டுப்பாடு உள்ள மாவட்டங்களுக்கு தலா ரூ. 1 கோடி ஒதுக்கப்படும் என்று ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை அமைச்சா் கே.எஸ்.ஈஸ்வரப்பா தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் புதன்கிழமை சுயேச்சை வேட்பாளா் சரத்குமாா் பச்சே கௌடாவின் கேள்விக்குப் பதிலளித்து அவா் பேசியது:

கா்நாடகத்தில் சமவெளி மாவட்டங்கள் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. குடிநீா் பிரச்னையை போக்க மாவவட்டங்களுக்கு தலா ரூ. 1 கோடி ஒதுக்கப்படும். குடிநீா் பிரச்னையை போக்க நீா் ஆதாரங்களைத் தேடும் பணி தொடங்கப்படும். தேவைப்படும் பகுதிகளில் ஆழ்த்துளைக் கிணறுகள் தோண்டவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டப்பேரவைத் தொகுதி அளவில் குடிநீருக்காக நடைபெற்ற 56 வளா்ச்சித் திட்டங்கள் விரைவில் நிறைவடைய உள்ளன. 56 வளா்ச்சித் திட்டங்களுக்கும் ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT