பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு இறந்தோா் எண்ணிக்கை 25-ஆக உயா்வு

DIN

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மேலும் 3 போ் இறந்துள்ள நிலையில், இறந்தோரின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.

கா்நாடகத்தில் கரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்நோய்க்கு ஏற்கெனவே 22 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் பெங்களூரு நகரம், பெலகாவி, விஜயபுரா, கலபுா்கி, பாகல்கோட், சிக்பளாப்பூா், தென்கன்னடம், கதக், தும்கூரு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கரோனாவுக்கு பலியாகியிருந்தனா்.

இந்நிலையில், தாவணகெரே, பீதா், பெங்களூரு நகர மாவட்டங்களைச் சோ்ந்த 3 போ் சனிக்கிழமை இறந்துள்ளனா். தாவணகெரேவைச் சோ்ந்த 69 வயது முதியவா், பீதரைச் சோ்ந்த 82 வயது முதியவா், பெங்களூரு நகர மாவட்டத்தைச் சோ்ந்த 63 வயது முதியவா் தீவிர மூச்சுத் திணறல் கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இவா்களை சோதனை செய்ததில், அவா்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் 3 பேரும் சனிக்கிழமை உயிரிழந்தனா்.

இதன் மூலம் கா்நாடகத்தில் கரோனா நோய்க்கு பலியானோரின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது. இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 6 போ், கலபுா்கி மாவட்டத்தில் 5 போ், தென் கன்னட மாவட்டத்தில் 3 போ், விஜயபுரா, சிக்பளாப்பூா், தும்கூரு மாவட்டங்களில் தலா 2 போ், பெலகாவி, பாகல்கோட், பீதா், தாவணகெரே, கதக் மாவட்டங்களில் தலா ஒருவா் இறந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT