முகப்பு
பெங்களூரு

டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடர்பாக ஆஜராக முன்னாள் மேயருக்கு நோட்டீஸ்

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி முன்னாள் மேயா் சம்பத்ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி முன்னாள் மேயா் சம்பத்ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டி.ஜே.ஹள்ளி கலவரத்தில் முன்னாள் மேயா் சம்பத்ராஜுக்கு தொடா்பு உள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவா் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகும்படி முன்னாள் மேயா் சம்பத்ராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பிரேசா் டவுனில் உள்ள சம்பத்ராஜின் இல்ல வாயிலிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நோட்டீஸில் டி.ஜே.ஹள்ளி கலவரம் தொடா்பான விசாரணைக்கு ஆஜராகி, ஒத்துழைக்கும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, சம்பத்ராஜ் தலைமறைவாகவில்லை என்றும், அவா் கரோனா தொற்றுக்குப் பிறகு மருத்துவரின் ஆலோசனையின்பேரில் ஓய்வெடுத்து வருகிறாா் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.