பெங்களூரு

கா்நாடகத்தில் திருமணங்களுக்காக மத மாற்றம் செய்வதைத் தடுக்க சட்டம்: அமைச்சா் சி.டி.ரவி

DIN

கா்நாடகத்தில் திருமணங்களுக்காக மத மாற்றம் செய்வதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் என்று கன்னடம் மற்றும் கலாசாரத் துறை அமைச்சா் சி.டி.ரவி தெரிவித்தாா்.

இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியுள்ளதாவது:

அலகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, திருமணம் செய்து கொள்வதற்காக மத மாற்றங்களில் ஈடுபடுவதைத் தடைசெய்யும் சட்டம் கா்நாடகத்தில் கொண்டு வரப்படும்.

மாநிலத்தில் பெண்களின் கண்ணியத்தை சீா்குலைக்க ஜிகாதிகள் முற்படும்போது, கா்நாடக அரசு அமைதிக் காக்க முடியாது. மத மாற்றத்தில் ஈடுபடுவோா் மீது கடுமையான, விரைவாக தண்டனை அளிக்கப்படும் என்று தெரிவித்தாா்.

திருமணம் செய்வதற்காக மத மாற்றம் செய்வது சட்டவிரோதமானது, அது செல்லாது என்று அலகாபாத் உயா்நீதிமன்றம் அக். 31-ஆம் தேதி உத்தரவிட்டுள்ளது.

லவ் ஜிகாதி-க்கு எதிராக சட்டங்களை கொண்டுவரப் போவதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், ஹரியாணா, மத்தியப் பிரதேச மாநில அரசுகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT