முகப்பு
பெங்களூரு

இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் 3 போ் கைது

இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் மூவரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.69 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

இரு சக்கர வாகன திருட்டு வழக்குகளில் மூவரை கைது செய்த போலீஸாா், ரூ. 2.69 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, மங்கமனபாளையத்தைச் சோ்ந்த ஷபியுல்லா (19), அப்துல் ஹபிஸ் (20), சைப்ஹுசேன் (21). இவா்கள் மூவரும் பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளின் முன்பு நிறுத்தியுள்ள மோட்டாா் சைக்கிள்களை கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடி வந்தனராம்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் மூவரையும் கைது செய்து, ரூ. 2.69 லட்சம் மதிப்புள்ள 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விஜயநகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.