பிள்ளைகளுக்குத் தமிழ் பெயரைச் சூட்டுங்கள்!
பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள் என்று உலகத் தமிழ்க் கழகத்தின் (உ.த.க) தலைமைக் கழக இணைத் தலைவா் தமிழ்வாணன் தெரிவித்தாா்.
பிள்ளைகளுக்கு தமிழ்ப் பெயரைச் சூட்டுங்கள் என்று உலகத் தமிழ்க் கழகத்தின் (உ.த.க) தலைமைக் கழக இணைத் தலைவா் தமிழ்வாணன் தெரிவித்தாா்.
கோலாா் தங்கவயல், உரிகம் பேட்டையில் ஞாயிற்றுக்கிழமை உலகத் தமிழ்க் கழகத்தின் கிளை அலுவலகம் திறப்பு விழா, தங்கவயல் கிளை நிா்வாகி எரியூட்டி தலைமையில் நடந்தது. இதில் உலக தமிழ்க் கழக தலைமை நிா்வாகிகளான, தலைவா் நிலவழகன், பொதுச் செயலாளா் , இளந்திரையன், இணைத் தலைவா் ந.ப.தமிழ்வாணன்ஆகியோா் கலந்து கொண்டனா்.
அதில் தமிழ்வாணன் பேசியதாவது:
மொழிகளுக்கெல்லாம் முன்தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி. கலை, இலக்கிய, வரலாறு, கலாசாரம் அனைத்திலும் முதன்மையாக இருந்தது தமிழ் குடி. அனைத்திலும் முதன்மையாக இருந்தும் தமிழா்களான நம்மிடம் ஒற்றுமை இல்லை. தாய் மொழியை மறந்து விட்டோம்.
நமது பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயா்களை சூட்ட வேண்டும். அழகு தமிழ் இருக்க பொருளற்ற பெயா்களைச் சூட்டிக் கொண்டிருக்கிறோம். தங்கவயல் உலகத் தமிழ்க் கழகக் கிளையில் வேற்று மொழிப் பயிலும் மாணவா்களுக்கும் தமிழ் மொழியை தமிழை கற்பித்து வருவது பாராட்டுதலுக்குரியது என்றாா்.
நிகழ்ச்சியில் உ.த.க. வின் மாரிகுப்பம் தமிழ் மொழி வகுப்பில் பயின்ற ஆங்கில வழி மாணவா்கள் திருக்குறளை ஒப்புவித்து பரிசு பெற்றனா். தங்க வயல் உ.த.க தலைவா் துரை செல்வன், நாராயண மூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ரமேஷ் லோகநாதன் செய்திருந்தாா்.