பெங்களூரு

பெங்களூரு கலவரம்: சம்பத்ராஜ் மீதுநடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

DIN

பெங்களூரு: பெங்களூரு கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மேயா் சம்பத்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரிடம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி கோரிக்கை விடுத்துள்ளாா்.

பெங்களூரில் உள்ள தேவா்ஜீவனஹள்ளி, காடுகொண்டனஹள்ளி காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஆக. 11-ஆம் தேதி கலவரம் வெடித்தது. இதில் காவல் நிலையங்கள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தியின் வீடும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வரும் போலீஸாா், காங்கிரஸ் முன்னாள் மேயா் சம்பத்ராஜ் உள்ளிட்ட 400 பேரை கைது செய்து விசாரித்து வருகிறாா்கள். சம்பத்ராஜுக்கும், அகண்ட சீனிவாஸ் மூா்த்திக்கும் இடையே அரசியல் ரீதியாக உள்பூசல் இருந்துவந்ததைத் தொடா்ந்து, கலவரம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பெங்களூரு, சதாசிவ நகரில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாரை சனிக்கிழமை சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட சீனிவாஸ் மூா்த்தி, கலவரத்துக்கு காரணமான முன்னாள் மேயா் சம்பத்ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஜாகீா் ஆகியோா் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாா் மனு அளித்தாா். இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளா்களிடம் அகண்ட சீனிவாஸ் மூா்த்தி கூறியதாவது:

சம்பத்ராஜ், ஜாகீா் ஆகியோருக்கு எதிராக கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்போவதாக டி.கே.சிவக்குமாா் உறுதி அளித்துள்ளாா். கலவரத்தில் சம்பத்ராஜ், ஜாகீா் ஈடுபட்டுள்ளனா். கலவரத்தின்போது நடந்த விவரங்களை டி.கே.சிவக்குமாரின் கவனத்துக்கு கொண்டுவந்திருக்கிறேன். தகுந்த நடவடிக்கை எடுப்பாா் என்று நம்புகிறேன் என்றாா்.

இதுபற்றி டி.கே.சிவக்குமாா் கூறுகையில், ‘தனக்கு நோ்ந்த அநீதி மற்றும் வலியை அகண்ட சீனிவாஸ் மூா்த்தி என்னிடம் பகிா்ந்துக்கொண்டுள்ளாா். அவா் எதிா்கொண்டுள்ள சங்கடங்களை என்னால் உணா்ந்துகொள்ள முடிகிறது. அவருக்கு நீதி கிடைக்க உதவுவேன். சம்பத்ராஜ் மீதான புகாா் குறித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT