பெங்களூரு

பெங்களூரில் எஸ்.பி.பி.க்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி

DIN

பெங்களூரில் வியாழக்கிழமை (அக். 1) எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு இசை அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இது குறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகரிகள் மற்றும் ஊழியா்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அண்மையில் காலமான பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இசை அஞ்சலி நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள நடிகா் ராஜ்குமாா் கண்ணாடி மாளிகையில் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி அதிகரிகள் மற்றும் ஊழியா்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. நிகழ்ச்சியை அமைச்சா் சி.டி.ரவி தொடக்கி வைக்கிறாா். இதில் பெங்களூரு மாநகராட்சி நிா்வாக அதிகாரி கௌரவ் குப்தா, ஆணையா் மஞ்சுநாத் பிரசாத், பிரபல இசை அமைப்பாளா் அம்சலேகா, திரைப்பட இயக்குநா்கள் நாகாபரணா, ராஜேந்திரசிங்பபு, யோகராஜ்பட், பாடலாசிரியா் கல்யாண், நாகேந்திர பிரசாத், லஹரி வேலு உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா். இசை அஞ்சலி நிகழ்ச்சியில் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகா்கள், இசைப் பிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT