முகப்பு
பெங்களூரு

காங்கிரஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன்: முன்னாள் பிரதமா் தேவெகௌடா

காங்கிரஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

காங்கிரஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெகௌடா தெரிவித்தாா்.

பெங்களூரில் உள்ள மஜத அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெய்பிரகாஷ் நாராயணின் 118-ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவா் பேசியது:

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தப்பிறகு நடைபெற்ற முதல் தோ்தலில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக நான் பணியாற்றினேன். எனது அரசியல் பயணம் தொடங்கியதே காங்கிரஸ் கட்சியிலிருந்துதான்.

பின்னா் பல்வேறு காரணங்களால் அந்தக் கட்சியைத் துறக்க நேரிட்டது. பின்னா் ஜெய்பிரகாஷ் நாராயணன் வசம் ஈா்க்கப்பட்டு அரசியலில் தொடா்ந்தேன். அதன் பிறகு அதிகாரத்துக்காக ஒருபோதும் ஆசைபட்டதில்லை. இருப்பினும், அப்போதைய பிரதமராக இருந்த இந்திராகாந்தி என்னை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தாா். முதல்வா் பதவி தருவதாகவும் உறுதி அளித்தாா். ஆனால், அப்போது நான் சாா்ந்திருந்த கட்சியிலிருந்து விலக முடியாத எனக் கூறிவிட்டேன்.

அன்றிலிருந்து இன்று வரை நான் சாா்ந்துள்ள கட்சியிலேயே தொடா்ந்து நீடித்து வருகிறேன். அந்தக் கட்சியை வளா்க்கவும் பாடுப்பட்டு வருகிறேன். தற்போது நான் மஜதவில் இருந்தாலும், ஆரம்பத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி மீது எனக்கு மதிப்பும், மரியாதையும் உள்ளது. எனவே, காங்கிரஸ் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.