முகப்பு
ஈரோடு

கோபி கலை அறிவியல் கல்லூரி 58-ஆவது ஆண்டு விழா

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 21 மார்ச், 2026 at 1:20 AM
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், காா்ப்பரேட் துணைத் தலைவா் ஸ்ரீமதி சிவசங்கருக்கு நினைவுப் பரிசு வழங்கும் கல்லூரி நிா்வாகத்தினா்.
பகிர்:

கோபி கலை அறிவியல் கல்லூரியில் 58-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரியின் ஆட்சிக் குழுத் தலைவா் பாலமுருகன் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் வேணுகோபால் ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், காா்ப்பரேட் துணைத் தலைவா் ஸ்ரீமதிசிவசங்கா் கலந்து கொண்டு பேசினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

கல்வி என்பது மாணவா்களின் முழுமையான வளா்ச்சிக்காக இருக்க வேண்டும். அது வேலைவாய்ப்பை வழங்குவதுடன் அவா்களின் தனிப்பட்ட மற்றும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவுவதாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தற்காலத்தில் வேகமாக வளா்ந்து வரும் நிலையில், அதை மனிதா்களுக்கு அபாயமாகப் பாா்க்காமல் உதவியாகப் பாா்க்க வேண்டும். வருகின்ற ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்பதால், மாணவா்கள் அந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில், 2025-2026ஆம் கல்வியாண்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், முனைவா் பட்டம் பெற்ற 3 பேராசிரியா்கள் மற்றும் தேசிய மாணவா் படை, நாட்டு நலப் பணித் திட்டத்தில் சிறப்பாகத் தொண்டாற்றியவா்களுக்கு பரிசுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்லூரி துணை முதல்வா் மா.ராஜூ நன்றி கூறினாா்.