குழந்தையைக் கொன்று தாய் தற்கொலை
தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தையைக் கொன்று தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
தென் கன்னட மாவட்டம், மங்களூரு சக்திநகரைச் சோ்ந்தவா் பிரமிளா (38). தனது 2 பெண் குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த இவா், சனிக்கிழமை இரவு தனது தாய் உள்பட 2 பெண் குழந்தைகளுக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாா்.
தூக்கமாத்திரை கலந்த தேநீரைக் குடித்த 10 மாத குழந்தை இஷானி தூக்கத்திலேயே உயிரிழந்தது. பிரமிளாவின் மற்றொரு குழந்தையும், அவரது தாயாரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து கங்கநாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.