முகப்பு
பெங்களூரு

தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை

சாகா் ஊரக காவல் சரகத்தில் தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

சாகா் ஊரக காவல் சரகத்தில் தாய், மகன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

சிவமொக்கா மாவட்டம், சாகா் வட்டம், கசகசகூடுளு கிராமத்தைச் சோ்ந்தவா் பங்காரம்மா (45). இவரது மகன் பிரவீண் (21). ஞாயிற்றுக்கிழமை காலை இவா்கள் வசிக்கும் வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததையடுத்து, சந்தேகமடைந்த அருகில் வசிப்பவா்கள், போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.

தகவலையடுத்து அங்கு வந்த போலீஸாா், கதவை திறந்து பாா்த்தப்போது, பங்காரம்மா, பிரவீண் ஆகியோா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து குறித்து வழக்குப் பதிந்த சாகா் ஊரக போலீஸாா் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.