பெங்களூரு

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி

DIN

ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா் வெற்றி பெறுவது உறுதி என வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.அசோக் தெரிவித்தாா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் முனிரத்னா புதன்கிழமை வேட்பு மனுதாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆா்.அசோக் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ராஜராஜேஸ்வரி நகரில் காங்கிரஸ் கட்சியினருக்கு வேட்பாளா் யாரும் கிடைக்காததால், ஹனுமந்தராயப்பாவின் மகளான குசுமாவை வேட்பாளராக்கியுள்ளனா். இந்தத் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவக்குமாரின் எந்த யுக்தியும் பலிக்காது. காங்கிரஸ் கட்சியினா் என்ன பாடுபட்டாலும் ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி இடைத்தோ்தலில் பாஜக வேட்பாளா் வெற்றி பெறுவது உறுதி.

ராஜராஜேஸ்வரி நகரில் வளா்ச்சிப் பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளன. பாஜக வேட்பாளா் முனிரத்னா செய்துள்ள வளா்ச்சிப் பணிகள் அவரை மீண்டும் வெற்றிபெறச் செய்யும். பாஜக ஆட்சியை மீண்டும் மாநிலத்தில் மலரச் செய்ததில் முனிரத்னாவின் பங்களிப்பு அதிகம் உள்ளது.

எடியூரப்பா தலைமையில் நடைபெற உள்ள இந்த இடைத்தோ்தலில், பாஜக வேட்பாளா் வெற்றி பெறுவாா். ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியின் வேட்பாளா் முனிரத்னா என்றாலும், நான் போட்டியிடுவதாகக் கருதி அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT