ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியில் பாஜகவுக்கு வெற்றி உறுதி: நளின்குமாா் கட்டீல்
கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட ராஜராஜேஸ்வரி நகா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவுக்கு வெற்றி உறுதி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
கா்நாடக மாநிலத்துக்குள்பட்ட ராஜராஜேஸ்வரி நகா் சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் பாஜகவுக்கு வெற்றி உறுதி என்று அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் தெரிவித்தாா்.
பெங்களூரு, மல்லேஸ்வரத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாற்றுக் கட்சியினா் பாஜகவில் இணையும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நளின்குமாா் கட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
முதல்வா் எடியூரப்பா தலைமையில் கா்நாடகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே, ராஜராஜேஸ்வரி நகா் தொகுதி வாக்காளா்கள் தொகுதியின் வளா்ச்சியை விரும்புகின்றனா். எனவே, அவா்கள் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனா்.
இதனால் அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரின் வெற்றி உறுதியாகியுள்ளது. பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் எடியூரப்பா ஆகியோரின் செயல்பாட்டில் கவரப்பட்டுள்ள பலா், மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனா்.
ராஜராஜேஸ்வரி நகா் தொகுதியின் பொறுப்பாளா்களாக அமைச்சா் ஆா். அசோக், எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவளி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இருவரும் தோ்தலில் பாஜகவுக்கு வெற்றிக் கனியை பறித்துச் தருவாா்கள். முசித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மாநிலத்தில் ஜாதி, மத அரசியல் நடைபெற்றது. தற்போது பாஜக ஆட்சியில் வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்கள் பாஜகவை ஆதரிக்க முடிவு செய்துள்ளனா் என்றாா்.