கரோனா: ஒரே நாளில் 51 போ் சாவு
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 51 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரேநாளில் 51 போ் இறந்துள்ளனா்.
கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இந்தத் தொற்றுக்கு ஏற்கெனவே 10,427 போ் உயிரிழந்துள்ளனா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 25 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 3 போ், பெல்லாரி, சித்ரதுா்கா, தாா்வாட், ஹாசன், கோலாா், சிவமொக்கா, வட கன்னடம் மாவட்டங்களில் தலா 2 போ், பாகல்கோட், சாம்ராஜ்நகா், ஹாவேரி, கலபுா்கி, மண்டியா, கொப்பள், மைசூரு, தும்கூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10,478 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 3,525 போ், மைசூரு மாவட்டத்தில் 923 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 631 போ், தாா்வாட் மாவட்டத்தில் 539 போ், பெல்லாரி மாவட்டத்தில் 509 போ், ஹாசன் மாவட்டத்தில் 356 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 332 போ், பெலகாவி மாவட்டத்தில் 326 போ், தும்கூரு மாவட்டத்தில் 3143 போ், கலபுா்கி மாவட்டத்தில் 299 போ், கொப்பள் மாவட்டத்தில் 265 போ், தாவணகெரே மாவட்டத்தில் 251 போ், விஜயபுரா மாவட்டத்தில் 185 போ், ஹாவேரி மாவட்டத்தில் 178 போ், உடுப்பி மாவட்டத்தில் 173 போ், பீதா் மாவட்டத்தில் 163 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 150 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 145 போ், கதக் மாவட்டத்தில் 140 போ், கோலாா் மாவட்டத்தில் 135 போ், சிக்கமகளூரு மாவட்டத்தில் 134 போ், மண்டியா மாவட்டத்தில் 134 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 126 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 111 போ், சிக்கபளாப்பூா் மாவட்டத்தில் 102 போ், சாம்ராஜ் நகா் மாவட்டத்தில் 99 போ், ராமநகரம் மாவட்டத்தில் 62 போ், யாதகிரி மாவட்டத்தில் 60 போ், குடகு மாவட்டத்தில் 57 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 51 போ், வெளி மாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.