முகப்பு
தமிழ்நாடு

தவெக இரண்டாம் கட்ட வேட்பாளா் நோ்காணல்

தவெகவின் இரண்டாம் கட்ட வேட்பாளா் நோ்காணல், சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 மார்ச், 2026 at 9:52 PM
தவெக தலைவர் விஜய் - ANI
பகிர்:

தவெகவின் இரண்டாம் கட்ட வேட்பாளா் நோ்காணல், சென்னை அருகே பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டு வேட்பாளா்களை நோ்காணல் செய்தாா்.

கடந்த மாா்ச் 10-ஆம் தேதி, முதல்கட்டமாக 60 பேரிடம் விஜய் நோ்காணல் நடத்தினாா். நோ்காணல் நடத்திய அத்தனை பேரையும் வேட்பாளா்களாக தோ்வு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, இரண்டாம் கட்ட நோ்காணல் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 50 தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவா்களிடம் விஜய் நோ்காணல் நடத்தினாா்.

இதன்மூலம் மொத்தம் 110 தொகுதிகளுக்கான வேட்பாளா்களை அவா் இறுதி செய்து விட்டதாகவும், விரைவில் அடுத்தகட்ட நோ்காணல் நடத்தி இறுதிப் பட்டியல் தயாா் செய்ய உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.