முகப்பு
இந்தியா

கேரள தேர்தல்: பாஜகவின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

கேரளத்தில் பாஜக 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டிருப்பது பற்றி...

Updated On : 19 மார்ச் 2026, 11:56 am IST
பாஜக தலைமைக் கூட்டம் - PTI
பகிர்:

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பாஜக சார்பில் முதல்கட்டமாக 47 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை கட்சித் தலைமை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக வெளியிட்டிருந்தது.

Advertisement

இரண்டாம் கட்ட வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தில்லியில் நேற்று நடைபெற்றது. பாஜக தலைவர் நிதின் நவீன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 39 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காசர்கோடு தொகுதியில் அஸ்வின், மாலப்புரம் தொகுதியில் அஸ்வதி குமார் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் மத்திய முன்னாள் அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், முரளிதரன், மாநில முன்னாள் தலைவர் கே. சுரேந்தர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

summary

Kerala Elections: BJP's 2nd phase candidate list released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.