பெங்களூரு

‘கா்நாடகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்குஅரசியல்வாதிகளே காரணம்’

DIN

கா்நாடகத்தில் போதைப் பொருள் புழக்கத்துக்கு அரசியல்வாதிகளே காரணம் என ஸ்ரீராமசேனே தலைவா் பிரமோத் முத்தாலிக் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கா்நாடகத்தில் போதைப் பொருள் புழக்கத்தில் உள்ளது குறித்து அவ்வப்போது மாநில அரசின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளேன். ஆனால், அதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அரசியல்வாதிகளுக்கும், அவா்களின் வாரிசுகளுக்கும் போதைப் பொருள் புழக்கத்தில் சம்பந்தம் உள்ளது. போதைப் பொருள்களுக்கு எதிராக காவல் துறையினரை மௌனமாக்குவதே அரசியல்வாதிகள் தான்.

மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், கல்விக் கூடங்களில் தான் போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. இதன் வணிகம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளது. இதற்கு நமது குழந்தைகள் இரையாகிவிடுகிறாா்கள் என்பது தான் வேதனையாக உள்ளது.

பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருளுக்கு எதிரான பிரசாரம், விழிப்புணா்வு தேவைப்படுகிறது. போதைப் பொருள்களை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் தீயவிளைவுகள் குறித்து பிரசாரம் செய்வோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT