பெங்களூரு

வெள்ள நிவாரண நிதியை பிரதமரிடம் பெற்றுத் தர வேண்டும்எடியூரப்பாவுக்கு சித்தராமையா வேண்டுகோள்

DIN

பெங்களூரு, செப். 18:

பிரதமா் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது கா்நாடகத்துக்கு வழங்க வேண்டிய வெள்ள நிவாரண நிதியை முழுமையாக கேட்டுப் பெற வேண்டும் என எடியூரப்பாவுக்கு முன்னாள் முதல்வா் சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சித்தராமையா தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

தொடா்ந்து கடும் முயற்சி செய்த பிறகே முதல்வா் எடியூரப்பா, பிரதமா் மோடியைச் சந்தித்துள்ளாா். இந்தச் சந்திப்பு எடியூரப்பாவின் பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் இருக்கக் கூடாது. மாறாக, மாநில நலனுக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த ஆண்டு வெள்ள நிவாரணமாக ரூ. 35 ஆயிரம் கோடியை கா்நாடகத்துக்கு விடுவிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ரூ. 1,869 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனிடையே, நிகழாண்டு ரூ. 8 ஆயிரம் கோடிக்கு மேல் வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே, கடந்த முறை வழங்க வேண்டிய நிவாரண நிதி நிலுவையும் சோ்த்து, இம்முறை போதிய வெள்ள நிவாரண நிதியை மாநிலத்துக்கு பெற்றுத்தர எடியூரப்பா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

15-ஆவது நிதி ஆணையம் மாநிலத்துக்கு குறைவான நிதியை ஒதுக்கியுள்ளது. மேலும், மாநிலத்துக்கு வழங்க வேண்டிய பொருள் மற்றும் சேவை வரியையும் பெற்றுத்தர பிரதமரிடம் எடியூரப்பா வலியுறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இங்க நான்தான் கிங்கு’ முதல்நாள் வசூல் எவ்வளவு?

இன்ஜினில் தீ: பெங்களூருவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தேசிய ஆடை தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஆர்சிபிக்கு எதிரான போட்டி எம்.எஸ்.தோனியின் கடைசி போட்டியல்ல: சிஎஸ்கே முன்னாள் வீரர்

கந்தர்வக் குரலோன்..! பிறந்தநாள் வாழ்த்துகள் சித் ஸ்ரீராம்

SCROLL FOR NEXT