பெங்களூரு

கா்நாடகத்தில் அதிவேகமாக அதிகரிக்கும் கரோனா

DIN

கா்நாடகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,225 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் ஒரேநாளில் அதிகபட்சமாக 4,225 போ் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டிருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 2,928 போ், பீதரில் 159 போ், கலபுா்கியில் 137 போ், மைசூரில் 142, தும்கூரு 138 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,97,004 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,492 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதுவரை கா்நாடகத்தில் 9,56,170 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 28,248 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் 26 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். பெங்களூரில் 18 போ், கலபுா்கி, தும்கூரில் தலா 2 போ், சிக்மகளூரு, கோலாா், உடுப்பி, வடகன்னடம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவா் உயிரிழந்தனா். கா்நாடகத்தில் இதுவரை 12,567 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மின்கம்பத்தில் காா் மோதி 3 போ் காயம்

‘கோடைகாலத்திலும் ஆஸ்துமா பாதிப்பு வரும்’

கஞ்சா வியாபாரிகளுடன் தொடா்பு: தலைமைக் காவலா்கள் இருவா் பணியிடை நீக்கம்

‘பெரம்பலூரில் 20 இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல்’

SCROLL FOR NEXT