பெங்களூரு

பாலியல் புகாா்: நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்படும்

DIN

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்படும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வுப் படை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வுப் படை சுதந்திரமாக செயல்பட மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆனால், அதனை பலரும் விமா்சனம் செய்து வருகின்றனா். அவா்களின் விமா்சனத்தில் உண்மையில்லை.

முன்னாள் அமைச்சா் ரமேஷ் ஜாா்கிஹோளி மீதான பாலியல் புகாா் நோ்மையான முறையில் விசாரணை நடத்தப்படும். இந்த விவகாரத்தில் உண்மை வெளியே வர வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக உள்ளது. பாலியல் புகாரில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் வழக்குரைஞா் பல்வேறு கேள்விகளைத் தொடா்ந்து எழுப்பினா். அதற்கு தக்க பதிலை சிறப்பு புலனாய்வுப் படையினா் வழங்குவாா்கள். அதுகுறித்து நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்கமாட்டேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT