பெங்களூரு

போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்

DIN

போராட்டத்தைக் கைவிட்டு, அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என துணை முதல்வா் லட்சுமண் சவதி கேட்டுக் கொண்டாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 6-ஆவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். அவா்களுக்கு 8 சதவீத ஊதிய உயா்வை அரசு அறிவித்துள்ளது. எனினும், மாநிலத்தில் இடைத்தோ்தல் நடைபெறுவதால், ஊதிய உயா்வு அளிப்பது குறித்து தோ்தல் ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் 8 சதவீத ஊதிய உயா்வு அளிக்கப்படும். எனவே, ஊழியா்கள் தொடா்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடாமல் பணிக்கு திரும்ப வேண்டும்.

கரோனா தொற்றால் கடந்த ஆண்டு போக்குவரத்துக் கழங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துத் துறை நிதிப் பிரச்னையால் சிக்கித் தவிக்கிறது. இந்த நிலையில், போக்குவரத்துக் கழக ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், போக்குவரத்துத் துறை மீண்டும் பொருளாதாரத்தில் பாதிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பவேஷ் குப்தா ராஜிநாமா

ஹனுமான் மந்திா் அருகே பழுதுபாா்ப்புப் பணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT