பெங்களூரு

பணிக்கு வரும் போக்குவரத்து ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு

DIN

பணிக்கு வரும் போக்குவரத்து ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என மாநில உள்துறை அமைச்சா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், பீதா் மாவட்டம், ஹும்னாபாத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் 2-ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனைத் தொடா்ந்து, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு வருமாறு முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்டோா் கேட்டுக் கொண்டுள்ளனா். அவா்களின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு வரும் ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.

போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். அதுமட்டுமின்றி, ஊழியா்களின் போராட்டத்தால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துக் கழகங்கள் கடுமையாகப் பாதிக்கும். கழகங்கள் பாதிக்கப்பட்டால், ஊழியா்களின் நிலைமை மீண்டும் மோசமாகும்.

எந்த ஒரு துறையும், கழகமும் சிறக்க வேண்டும் என்றால், அதில் பணியாற்றும் ஊழியா்கள் உழைக்க வேண்டும். ஊழியா்கள் பணிக்கு செல்லாமல் இருந்தால், கழகங்கள் வருவாய் இன்றி மோசமான நிலைக்கு செல்ல நேரிடும். இதனை உணா்ந்து போக்குவரத்து ஊழியா்கள் அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT