பெங்களூரு

கா்நாடக மக்களுக்கு மே 1 முதல் இலவசமாக தடுப்பூசி செலுத்த வேண்டும்: குமாரசாமி

DIN

கா்நாடக மக்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து தனது சுட்டுரையில் சனிக்கிழமை அவா் கூறியிருப்பதாவது:

மே 1-ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. நிதி நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டுள்ள கா்நாடக மக்கள் 6.5 கோடி பேருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியை செலுத்த வேண்டும்.

ஜாா்கண்ட், கோவா, சத்தீஸ்கா், உத்தர பிரதேசம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம், கேரளம், பிகாா், சிக்கிம் போன்ற மாநிலங்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. அதேபோல, கா்நாடகத்திலும் கரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்.

கட்டணம் செலுத்தி கரோனா தடுப்பூசியைச் செலுத்தும் நிலை உருவானால், அதனை செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர மாட்டாா்கள் என்பது தான் இன்றைய நிலை. எனவே, மே 1-ஆம் தேதி முதல் 18 வயது முதலானோருக்கு இலவசமாகத் தடுப்பூசி செலுத்துவதாக மாநில அரசு அறிவிக்க வேண்டும்.

ரூ. 2.5லட்சம் கோடி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கா்நாடக அரசுக்கு தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 2 ஆயிரம் கோடியை ஒதுக்குவது பெரும் நிதிச் சுமையாக இருக்காது. ஒன்றரை மாதங்களுக்கு முன்பே கரோனா தடுப்பூசியை இலவசமாகத் தர வேண்டும் என்று மாநில அரசுக்கு ஆலோசனை வழங்கியிருந்தேன்.

போலியோ தடுப்பு சொட்டு மருந்தை அளிப்பது போல, அனைவருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்க முடிவெடுத்தால், அது பாராட்டத்தகுந்ததாக இருக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT