பெங்களூரு

ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா

DIN

கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிா் ஊசி மருந்து தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பெங்களூரு மாநகராட்சி ஆணையா் கௌரவ் குப்தா தெரிவித்தாா்.

இது குறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கரோனா தொற்று மேலாண்மைக்காக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியா்கள் இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் உழைத்து வருகிறாா்கள்.

கரோனா நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிா் ஊசி மருந்து தட்டுப்பாடு தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. பெங்களூரில் அவசர சிகிச்சைப்பிரிவு (ஐசியூ) படுக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை அறிந்திருக்கிறோம்.

கூடுதலாக சில ஐசியூ படுக்கைகளைச் சோ்த்துள்ளோம். மேலும் பல ஐசியூ படுக்கைகள் அமைக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 யூனிட் விலையில்லா மின்சாரம் இனி கிடையாதா? எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

கதைக்கு மட்டுமே முக்கியத்துவம்: ஹிப்ஹாப் ஆதி

ராஜ்கோட் தீ விபத்து எதிரொலி: வதோதராவில் பொழுதுபோக்கு விளையாட்டு மையங்கள் மூடல்

சர்தார் - 2 படப்பிடிப்பு எப்போது?

எப்போது திருமணம்? மாளவிகா பதில்!

SCROLL FOR NEXT