பெங்களூரு

கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்

DIN

பெங்களூரு: கரோனா தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக மக்களுக்கு வழங்க வேண்டும் என கா்நாடக மாநில சிபிஎம் செயலாளா் யூ.பசவராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா பெருந்தொற்றால் நாடு பெரும் இன்னலில் தவித்துக்கொண்டுள்ளது. இந்த நிலையில், மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய கரோனா உதவித்தொகை மற்றும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்காமல் மத்திய அரசு காலம் கடத்திக்கொண்டுள்ளது.

மத்திய அரசுக்கு ரூ. 150-க்கு கிடைக்கும் கரோனா தடுப்பூசியை மாநில அரசுகளுக்கு ரூ. 400-க்கு கொள்முதல் செய்யுமாறு மாநில அரசுகளை வற்புறுத்தும் மத்திய அரசின் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய அனைத்து நிலுவைத் தொகைகளையும் மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். மாநில மக்களுக்கு கரோனா தடுப்பூசியை மத்திய அரசே இலவசமாக வழங்க வேண்டும்.

கரோனா பணிகளுக்காக நாடுமுழுவதும் இருந்து மக்களிடம் வசூலித்த தொகை பி.எம்.கோ்ஸ் நிதியில் இருப்பதை கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மருத்துவ அறிஞா்கள் முன்னெச்சரிக்கை விடுத்தபோதும் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியமான நடவடிக்கைகளால் இரண்டாவது கரோனா அலைக்கு மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், மாநிலத்தில் காணப்படும் மருத்துவ வசதிகள் போதுமானதாக இல்லை. கரோனா தொற்றாளா்களுக்கு சிகிச்சை அளிக்க பள்ளி, கல்லூரி, விடுதி, திருமண மண்டபங்கள், உணவு விடுதிகளை பயன்படுத்திக்கொள்ள மத்திய அரசின் நிதியுதவியை மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டும்.

கா்நாடக மக்கள் கரோனாவால் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், மாநில அரசுக்கு மத்திய அரசு எவ்வித உதவியும் செய்யாத இருப்பதை கா்நாடக எம்.பி.க்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது வேதனையாக இருக்கிறது. கா்நாடகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள், மத்திய அரசை அணுகி, கா்நாடக அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் பெற்று, மக்களைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT