பெங்களூரு

மேக்கேதாட்டு அணை: விரைவில் கர்நாடகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம்; பசவராஜ் பொம்மை

மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

DIN

மேக்கேதாட்டு அணை தொடா்பாக விரைவில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 9,000 கோடி செலவில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே, மேக்கேதாட்டு அணை திட்டத்தை எதிா்த்து தமிழகம், புதுச்சேரியில் காவிரி டெல்டா பகுதியில் போராட்டம் நடத்தப்போவதாக பாஜக மற்றும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதனிடையே, பெங்களூரில் செய்தியாளா்களிடம் முதல்வா் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

மேக்கேதாட்டு அணை திட்டம் தொடா்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்துக்கு விரைவில் ஏற்பாடு செய்யப்படும். கா்நாடக மாநிலத்தின் நிலம், நீா் போன்ற விவகாரங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றாகத் திரள வேண்டியது அவசியமாகும். அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நம்பிக்கையை உறுதிசெய்து கொண்டு, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

அந்நிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT