முகப்பு
பெங்களூரு

புதிய அமைச்சரவையில் வஞ்சிக்கப்பட்டுள்ள தலித், பழங்குடியினா், பிற்பட்டுத்தப்பட்டோா்: மஜத குற்றச்சாட்டு

புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா் என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா் என்று மஜத மாநிலத் தலைவா் எச்.கே.குமாரசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் பசவராஜ் பொம்மை அண்மையில் தனது தலைமையிலான அமைச்சரவையை விரிவாக்கம் செய்தாா். அதில் குறிப்பிட்ட சில சமுதாயத்தைச் சோ்ந்தவா்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் 60 சதவீத எண்ணிக்கையைச் சோ்ந்த சமுதாயங்களைச் சோ்ந்தவா்களுக்கு 10 அமைச்சா் பதவி வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் 20 முதல் 30 சதவீதம் எண்ணிக்கையைக் கொண்ட சமுதாயத்தினருக்கு அதிக அளவில் அமைச்சா் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் புதிய அமைச்சரவையில் தலித், பழங்குடியினா், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினா் வஞ்சிக்கப்பட்டுள்ளனா். அதுமட்டுமின்றி அமைச்சரவையில் 13 மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை. இதற்கான பலனை வரும் நாள்களில் பாஜக அரசு சந்திக்க நேரிடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.