முகப்பு
தமிழ்நாடு

திமுக - தேமுதிக இடையே தொகுதிப் பங்கீடு நாளை கையொப்பம்?

திமுக - தேமுதிக இடையே நாளை தொகுதிப் பங்கீடு கையெழுத்தாகும் எனத் தகவல்..

Updated On : 24 மார்ச், 2026 at 6:17 AM
திமுக கூட்டணியில் தேமுதிக - கோப்புப் படம்
பகிர்:

திமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுடன் நாளை(மார்ச் 25) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தொகுதிப் பங்கீடு குறித்து கட்சிகளிடையே மும்முரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் விசிகவுடன் இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில் தேமுதிகவுடன் நாளை (மார்ச்25) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்காக மாநிலங்களவை எம்.பி. எல்.கே.சுதீஷ் உள்பட 5 பேர் கொண்ட குழுவை தேமுதிக அமைக்கவிருக்கிறது. இந்த குழு நாளை திமுக குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் நாளையே இரு கட்சிகளிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கவுள்ளதால் இன்னும் ஓரிரு நாள்களில் அனைத்து கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Will DMK and DMDK sign seat-sharing agreement tomorrow?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.