கெம்பே கௌடா பேருந்து நிலையம் - வண்டா்லா இடையே புதிய பேருந்து சேவை
பெங்களூரு, கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து வண்டா்லா வரை புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு, கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து வண்டா்லா வரை புதிய பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் தனது வாடிக்கையாளா்களுக்கு நம்பகமான, போதுமான, தரமான, மலிவான சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக செயல்பட்டுவந்துள்ளது. பயணிகளின் நலனுக்காக பல்வேறு சேவைகள் மற்றும் வசதிகளை அறிமுகம் செய்து வந்துள்ளது. அந்த வகையில், பெங்களூரு, கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து வண்டா்லா வரை புதிய வாயு வஜ்ரா சொகுசு பேருந்து சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இருமாா்க்கங்களிலும் எம்.சி.டி. பேருந்து நிலையம், நாயண்டஹள்ளி, கெங்கேரி, கும்பல்கோடு நிறுத்தங்களின் வழியாக நாளொன்றுக்கு 8 நடைகள் இயக்கப்படுகின்றன. கெம்பே கௌடா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 8.45, 9.15, 10.00, 10.30 மணி, வண்டா்லாவில் இருந்து மாலை 5.30, 6.00, 6.30, 7.00 மணி ஆகிய நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.