முகப்பு
இணையம் ஸ்பெஷல்

மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன் அறிய வேண்டிய 6 தகவல்கள்!

மருத்துவக் காப்பீடு எடுக்கும் முன் இந்த 6 தகவல்களை அறிய வேண்டும்..

Updated On : 24 மார்ச், 2026 at 8:07 AM
மருத்துவக் காப்பீடு - EPS
பகிர்:

ஒரு சாதாரண இருமல், சளி, காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர்களிடம் ரூ.1000 இல்லாமல் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது, மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் மருத்துவச் செலவைச் சமாளிக்க மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

இதுவரை மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ளாதவர்கள் உடனடியாக அது குறித்து் சிந்திப்பது நல்லது. சிலர் தனிநபர் பாலிசியாகவும் சிலர் குடும்பத்துக்கான பாலிசியாகவும் எடுத்துக் கொள்வார்கள்.

அவ்வாறு மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது ஒரு சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. காத்திருப்புக் காலம் : ஒரு மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது சில சிகிச்சைகளை உடனடியாக காப்பீட்டில் பயன் பெற முடியாது. ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகே நோய்களுக்கு சிகிச்சை பெற முடியும் என ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். அதனை கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

2. மருத்துவமனை அறை வாடகை : ஒரு சில மருத்துவக் காப்பீடுகளில் மருத்துவமனை அறை வாடகைக்கு குறைந்த சதவிகிதமே பணம் செலுத்தும் வகையில் இருக்கும். அவ்வாறு இருக்கும் பாலிசிகளை வைத்திருப்போர், மருத்துவமனையில் உயர்தர அறைகளை எடுக்கும்போது கூடுதல் கட்டணத்தை நாமே செலுத்த நேரிடும்.

3. சிகிச்சைக்கான உள்-உச்ச வரம்புகள்: மருத்துவக் காப்பீடுகளில், ஒரு சில நோய்களுக்கு மட்டும் குறிப்பிட்ட உள்-உச்ச வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும். உதாரணமாக கண்-புரை, இதய சிகிச்சைகளுக்கு. அவற்றை கவனமாக பார்க்க வேண்டும்.

4. மருத்துவமனைகள்: உங்களுக்கு அருகில் இருக்கும் மருத்துவமனைகள், மருத்துவக் காப்பீட்டில் நேரடியாக பயன்பெறும் பட்டியலில் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ளுங்கள். பட்டியலில் இல்லாத மருத்துவமனையாக இருந்தால் பணத்தை நாம் செலுத்திவிட்டு, பிறகு காப்பீடு நிறுவனத்திடம் கோர வேண்டிய அவசியம் ஏற்படும்.

5. பணத்தை திரும்ப செலுத்துதல்: பணம் செலுத்தி சிகிச்சை செய்துகொண்டு, அதனை கிளைம் செய்யும்போது, அதிகபட்ச தொகையை கொடுக்கும் காப்பீட்டு நிறுவனமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொண்டு பாலிசி எடுக்கலாம்.

இது மிகவும் முக்கியம்.. ஒரு சில மருத்துவக் காப்பீடுகள் ஒரு முறை முழு தொகையையும் சிகிச்சைக்காக வழங்கிய பிறகு, அதே ஆண்டில் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிட்டால், மீண்டும் அதே தொகையை செலுத்தும் சலுகைகளை வழங்குகின்றன. இந்த வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

summary

You should know these 6 things before taking out health insurance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.