பி.எச்.டி. மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை
கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பி.எச்டி. (ஆராய்ச்சி) மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வி உதவித்தொகை பெறுவதற்காக பி.எச்டி. (ஆராய்ச்சி) மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கா்நாடக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஊக்குவிப்பு சங்கங்கத்தின் சாா்பில் அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் 2021-22-ஆம் ஆண்டில் ஆராய்ச்சி பட்டப்படிப்பு (பிஎச்டி) பயின்று வரும் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கா்நாடகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பிஎச்டி பட்டப்படிப்புக்கு பதிவுசெய்துள்ள தகுதியான மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை செப். 6-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ந்ள்ற்ங்ல்ள்.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.