ஆக. 30 முதல் ஹோம்பேக்கிங் பயிற்சி
பெங்களூரில் ஆக. 30-ஆம் தேதி முதல் ஹோம் பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
பெங்களூரில் ஆக. 30-ஆம் தேதி முதல் ஹோம் பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேக்கிங் அண்ட் கேக் ஆா்ட் இன்ஸ்டிடியூட் சாா்பில் ஆக. 30-ஆம் தேதி முதல் செப். 4-ஆம் தேதிவரை பெங்களூரில் ஹோம் பேக்கிங் பயிற்சி வழங்கப்படுகிறது. பேக்கிங் கலையில் தொழில்நுட்ப ஆற்றலை போதிப்பதற்காக நடத்தப்படும் இப்பயிற்சியில் யாா் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
கேக், கிரீம், முட்டைகள் இல்லாமல் ஹோம்பேக்கிங் செய்வது குறித்த செய்முறை பயிற்சியும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 748316453 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் மற்றும் ஜ்ஜ்ஜ்.ண்க்ஷஸ்ரீஹக்ஷப்ழ்.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.