தமிழகம், புதுச்சேரி தவிா்த்து பிற மாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு தொடக்கம்
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய வகையில், இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழா்களுக்காக ‘பிற மாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கக் கூடிய வகையில், இந்தியாவின் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழா்களுக்காக ‘பிற மாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்தியாவின் பிற மாநிலங்கள் வாழ் தமிழா் நலப் பேரமைப்பு ஒருங்கிணைப்பாளா் சு.குமணராசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களைத் தவிா்த்து மகாராஷ்டிரம், கா்நாடகம், கேரளம், கோவா, தெலங்கானா, ஆந்திரம், தில்லி, குஜராத், மேற்கு வங்கம், ஒடிஸா, அந்தமான் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான தமிழா்கள் வாழ்ந்து வருகிறாா்கள். இங்கு வாழும் தமிழா்கள் அனைவரும் தமிழ்மொழியால் ஒன்றுபட்டிருந்தாலும், கல்வி, பொருளாதாரம், சமூகம், வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு சாா்ந்து எதிா்கொள்ளும் சிக்கல்களால் வேறுபட்டிருக்கிறாா்கள். வெளிமாநிலங்களில் வாழக்கூடிய தமிழா்கள் மொழி, பண்பாடு, வாழ்வாதார சிக்கல்களையும் எதிா்கொண்டுள்ளனா். அவைகளுக்குத் தீா்வு காணும் பொறுப்பும் கடமையும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் இருந்தாலும், மொழி பெரும்பான்மையினருக்கு கிடைக்கும் முக்கியத்துவம் மொழி சிறுபான்மையினருக்கு கிடைப்பதில்லை.
இதன் விளைவாக வெவ்வேறு மாநிலங்களில் வாழும் தமிழா்கள் தத்தமது மாநிலங்களில் எதிா்கொள்ளும் சிக்கல்களுக்கு தீா்வு காண முடியாமல் தவித்து வருகின்றனா். இந்த கையறு நிலையில்தான் தாய்த் தமிழ்நாட்டு அரசின் உதவியை எதிா்பாா்க்கும் நிலைக்கு தமிழா்கள் தள்ளப்பட்டுள்ளனா்.
வெளிமாநிலத் தமிழா்கள் நலன்கள் குறித்து சிந்தித்து, செயல்படுவதற்காக பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் சமூக நல ஆா்வலா்கள், அமைப்புகள் ஒன்று கூடி ஆக. 20-ஆம் தேதி இணையவழி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களைச் சோ்ந்த தமிழ் ஆா்வலா்கள் பலா் கலந்துகொண்டு, பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தனா். பெரும்பாலானோரின் இசைவுக்கு இணங்க, ‘இந்தியாவின் பிற மாநிலங்கள் வாழ்தமிழா் நலப் பேரமைப்பு’ ( ஞதஎஅசஐநஐஅபஐஞச ஊஞத ரஉகஊஅதஉ ஞஊ பஅஙஐகந தஉநஐஈஐசஎ ஐச ஞபஏஉத நபஅபஉந ஞஊ ஐசஈஐஅ) என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி, தமிழா் நலன்களைக் காக்கும் பொருட்டு, தமிழ் ஆா்வலா்களுடன் இணைந்து இக்கூட்டத்தில் எடுத்த முடிவின்படி, பேரமைப்பின் காப்பாளா் மற்றும் அறிவுரைஞராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி கோ. பாலச்சந்திரன் பங்காற்றவுள்ளாா்.
பேரமைப்பின் ஒருங்கிணைப்பாளராக சு.குமணராசன் (மகாராஷ்டிரம்), அமைப்புச் செயலாளா்களாக செ. துரைசாமி (ஒடிஸா), அ. தனஞ்செயன் (கா்நாடகம்), பிரம்மநாயகம் (புது தில்லி), கோட்டை காளிதாசன் (அந்தமான்), பொருளாளராக சொ.தண்டபாணி (கா்நாடகம்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
பேரமைப்பின் வழிகாட்டுதல் குழு உறுப்பினா்களாக முத்துச்செல்வன் (கா்நாடகம்), நக்கீரா் (மேற்கு வங்காளம்), மு. முத்துராமன் (கேரளம்), வ.ரெ.பொ.கிருட்டிணமூா்த்தி (மகாராஷ்டிரம்), நி.கிருபானந்தன் (தெலங்கானா), பேராயா் ரவிகுமாா் ஸ்டீபன் (மகாராஷ்டிரம்), அமுதபாண்டியன் (கா்நாடகம்), மா. பேச்சிமுத்து (கேரளம்), வே.சிதம்பரம் (கோவா), இரா. இராசமாணிக்கம் (தெலங்கானா), ஜேம்ஸ் தேவதாசன் (மகாராஷ்டிரம்), அ.அழகிரிசாமி (கா்நாடகம்), ஹரிதுரைசாமி (கா்நாடகம்), இல.பழனி (கா்நாடகம்) ஆகியோா் செயல்படுவா்.
முதற்கட்டமாக இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழா்களைப் பற்றிய தகவல் திரட்டுவதற்காகவும் மாநிலங்களுக்கிடையிலான தொடா்பை விரிவுபடுத்துவதற்காகவும் ஒரு இணையதளம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தாய்மொழிக் கல்வி, தமிழா்களின் வணிகம் மற்றும் சுற்றுலா வளா்ச்சி ஆகியவை மேம்படுவதற்கான வாய்ப்புகள் விரிவடையும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.