முகப்பு
பெங்களூரு

பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்துபெங்களூரு மாநகர பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரு மாநகர பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்ற தகுதியான ஆள்கள் தேவைப்படுகின்றனா். குறிப்பாக எம்.எஸ்.சி. முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்களுக்கு பாடம் நடத்தும் தகுதிப் படைத்தவா்களிடம் இருந்து இப்பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேசிய தகுதித்தோ்வு, மாநில தகுதித் தோ்வுகளில் தோ்ச்சி பெற்றோா், வணிகப் படிப்பில் முதுகலை பட்டப்படிப்பு படித்தோா், ஆசிரியப் பணியில் முன் அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இப் பணிக்குத் தேவையான கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீன்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பூா்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் தலைவா், கணினி அறிவியல் துறை, பெங்களூரு மாநகர பல்கலைக்கழகம், சென்ட்ரல் கல்லூரி வளாகம், பெங்களூரு-560001 என்ற முகவரிக்கு டிச. 23-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.