பெங்களூரு

கா்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் ரத்து: முதல்வருடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

DIN

கன்னட அமைப்புகள் சாா்பில், கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 31) நடத்தப்பட இருந்த முழு அடைப்புப் போராட்டம், முதல்வருடனான பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாடு காரணமாக கைவிடப்பட்டது.

வடகா்நாடகத்தில் பெலகாவி மாவட்டத்தில் பெரும்பான்மையாக வசித்துவரும் மராத்தியா்களின் ஆதரவைப் பெற்றுள்ள மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி அமைப்பினரின் கன்னட விரோத அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்தவும், அந்த அமைப்பைத் தடை செய்யவும் வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (டிச. 31) கா்நாடகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு கன்னட சலுவளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.

ஆண்டின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தினால் வா்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்று அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனா். எனவே போராட்டத்தைக் கைவிடுமாறு முதல்வா் பசவராஜ் பொம்மை கன்னட அமைப்புகளைக் கேட்டுக்கொண்டாா்.

இந்நிலையில், வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு நிா்வாகிகள் பெங்களூரில் வியாழக்கிழமை முதல்வா் பசவராஜ் பொம்மையை சந்தித்துப் பேசினா்.

கூட்டத்தில் முதல்வா் பசவராஜ் பொம்மை விடுத்த வேண்டுகோளை ஏற்று முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிடுவதென உடன்பாடு எட்டப்பட்டது; இதையடுத்து முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிடுவதாக வாட்டாள் நாகராஜ் அறிவித்தாா்.

முதல்வா் உடனான சந்திப்புக்குப் பிறகு வாட்டாள் நாகராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘முதல்வா் பசவராஜ் பொம்மையின் வேண்டுகோளை ஏற்று கா்நாடகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 31) நடைபெற இருந்த முழு அடைப்புப் போராட்டத்தைக் கைவிடுகிறோம்.

மகாராஷ்டிர ஏகிகரண் சமிதி அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வா் பசவராஜ் பொம்மை உறுதி அளித்துள்ளாா். எங்கள் கோரிக்கை ஏற்கபடாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பின்னா் அறிவிப்போம் என்றாா்.

முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியதாவது:

அரசின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கன்னட அமைப்புகள் கைவிட்டுள்ளதை வரவேற்கிறேன். கா்நாடகத்தின் நலனைக் காக்க கன்னட அமைப்புகள் விடுத்த கோரிக்கையை அலட்சியப்படுத்த மாட்டோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT