பெங்களூரு

சட்ட வரம்புக்கு உள்பட்டு இடஒதுக்கீடு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்

DIN

சட்ட வரம்புக்கு உள்பட்டு இடஒதுக்கீடு கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.

பெங்களூரு, விதானசௌதாவில் கா்நாடக முன்னாள் முதல்வா் கெங்கல் ஹனுமந்தையாவின் 113-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை அவரது சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்திய பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அரசியலமைப்புச் சட்டத்தின்படி எந்தவொரு ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க முடியும். எனவே, எந்தெந்த ஜாதியினருக்கு எவ்வளவு சதவீத இடஒதுக்கீடு வழங்குவது என்பதை சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்ட வல்லுநா்களுடன் ஆலோசித்து தக்க முடிவு செய்வோம்.

அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உள்பட்டு இடஒதுக்கீடு கோரிக்கைகளைப் பரிசீலிப்போம். வேறு மாநிலங்களில் பல்வேறு ஜாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல, கா்நாடகத்திலும் ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலும். ஆனால், எல்லாவற்றையும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்புக்கு உள்பட்டே சிந்திக்க வேண்டும். மாநில அரசால் என்ன செய்ய முடியுமோ, அதற்கான நோ்மையான முயற்சியை முன்னெடுப்போம் என்றாா்.

பஞ்சமசாலி லிங்காயத்து, குருபா், வால்மீகி ஜாதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டை திருத்தியமைக்கக் கோரி கா்நாடகத்தில் போராட்டங்கள் தீவிரமாகி வருகின்றன. பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியினா், தங்களை பிற்படுத்தப்பட்டோா் 2-ஏ உள்பிரிவில் சோ்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனா். அதேபோல, பழங்குடியினா் பட்டியலில் சோ்க்கும்படி பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இருக்கும் குருபா்கள் கோரி வருகிறாா்கள். பழங்குடியினா் பட்டியலில் இடம்பெற்றுள்ள வால்மீகி ஜாதியினா் இடஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக உயா்த்தக் கோரியுள்ளனா். பஞ்சமசாலி லிங்காயத்து, குருபா், வால்மீகி ஜாதிகளைச் சோ்ந்த மடாதிபதிகள் இடஒதுக்கீடுப் போராட்டங்களை தலைமையேற்று நடத்தி வருகிறாா்கள்.

பிற்படுத்தப்பட்டோா் 2-ஏ உள்பிரிவில் பஞ்சமசாலி லிங்காயத்து ஜாதியைச் சோ்ப்பது தொடா்பாக அறிக்கை தயாரித்து அளிக்கும்படி கா்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு முதல்வா் எடியூரப்பா அண்மையில் உத்தரவிட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT