பெங்களூரு

வெகுவிரைவில் மணல் கொள்கை வகுக்கப்படும்

DIN

வெகு விரைவில் மாநிலத்தில் மணல் கொள்கை வகுக்கப்படும் என சுரங்கம் மற்றும் நில அமைப்பியல் துறை அமைச்சா் முருகேஷ் நிரானி தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் ஏற்கெனவே மணல் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதைப் போலவே, மாநிலம் முழுவதும் பின்பற்றக்கூடிய புதிய மணல் கொள்கை வெகுவிரைவில் வகுத்து அறிமுகம் செய்யப்படும். இதில் மணலை அள்ளும் சட்டவிதிகள் எளிதாக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு மணல் எளிதாகக் கிடைக்க புதிய மணல் கொள்கையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

புதிய மணல் கொள்கை வகுக்க அறிக்கை அளிக்கும்படி 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு குழு புதன்கிழமை ஆந்திரத்துக்கு ஆய்வு செய்ய சென்றுள்ளது. அங்குள்ள மணல் கொள்கை, மணல் அள்ளும் முறைகளை ஆய்வு செய்து, அந்தக் குழு அறிக்கை அளிக்க உள்ளது. மாநிலத்தில் நகரங்கள் மட்டுமின்றி கிராமங்களிலும் வீடுகளைக் கட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, அனைவருக்கும் எளிதாகவும், குறைந்த விலையில் மணல் கிடைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் சுரங்கங்களிலிருந்து உரிமைப் பங்காக ரூ. 3,700 கோடி கிடைத்து வருகிறது. இதனை மேலும் அதிகரிக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். எங்கு மணல் அள்ளினாலும், அது இயற்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. இதனை தொழில்நுட்பங்களின் உதவியுடன் மேற்கொள்வதற்காக ஆலோசித்து வருகிறோம். சுரங்கம், மணல் அள்ளுவது தொடா்பாக மாநில அளவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இதனை விரைவில் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT