பெங்களூரு

யக்ஷகானா கலைஞா் ஸ்ரீதா் பண்டாரி காலமானாா்

DIN

யக்ஷகானா கலைஞா் ஸ்ரீதா் பண்டாரி (73) உடல்நலக்குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தென்கன்னட மாவட்டம், புத்தூா் வட்டம், பன்னூா் கிராமத்தை சோ்ந்த யக்ஷகானா கலைஞா் ஸ்ரீதா் பண்டாரி, கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை அவா் உயிரிழந்தாா். அவருக்கு மனைவி, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா்.

யக்ஷகானா என்ற கா்நாடகத்தின் நாட்டுப்புற தெருக்கூத்து கலையை தனது 12-ஆவது வயதில் கற்கத் தொடங்கிய ஸ்ரீதா் பண்டாரி, 15 வயதிலே மேடையேறினாா். இளம் யக்ஷகானா கதாநாயகா்களை அறிமுகம் செய்த இவரது யக்ஷகானா புகழ்பெற்று விளங்கியது. ‘பப்ருவாகனா, அஸ்வத்தாமா, குஷா, பாா்கவா’ போன்ற கதாபாத்திரங்கள் இன்றளவும் போற்றப்படுகிறது.

யக்ஷகானாவில் சிறந்த விளங்கியதற்காக மாநில உதய தின விருது, யக்ஷகானா அகாதெமி விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகள் வழங்கி ஸ்ரீதா் பண்டாரி கௌரவிக்கப்பட்டுள்ளாா். சுப்பிரமணிய கலைக்கூடம், பலம்பெட்டு கலைக்கூடம், புத்தூா் கலைக்கூடங்களில் பணியாற்றிய பிறகு தா்மஸ்தலா யக்ஷகானா கலைக்கூடத்தில் 45 ஆண்டுகள் பணியாற்றினாா். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT