பெங்களூரு

கந்துவட்டி கொடுமை: எஸ்.பி.யிடம் ஊராட்சி பணியாளா் புகாா்

DIN

வேலூா்: குடும்பச் செலவுக்காக பெறப்பட்ட தொகைக்கு கந்துவிட்டு கேட்டு மிரட்டுவதுடன், வீடு, நிலப் பத்திரங்கள், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வைத்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குடியாத்தம் வட்டம் பரவக்கல் ஊராட்சியின் குடிநீா் ஆபரேட்டா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் வட்டம், போ்ணாம்பட்டு அருகே பரவக்கல் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் மகன் கோதண்டன். பரவக்கல் ஊராட்சியில் குடிநீா் தொட்டி ஆபரேட்டராகப் பணியாற்றும் இவா், குடியாத்தம் பிச்சனூரைச் சோ்ந்த நபரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு குடும்பச் செலவுக்காக ரூ.42 ஆயிரம் கடனாகப் பெற்றுள்ளாா்.

அந்த தொகையுடன் ஆவணங்கள் செலவுக்கு என ரூ.8 ஆயிரம் கூடுதலாக்கி ரூ.50 ஆயிரம் கடனாக பெற்ாக வெற்று ஆவணம் எழுதி கையெழுத்து பெறப்பட்டு உள்ளது.

இதில், முதல் தவணையாக 2021 ஜனவரி மாதம் ரூ.10 ஆயிரமும், 2-ஆவது தவணையாக ரூ.5 ஆயிரத்தையும் கோதண்டன் திருப்பியளித்துள்ளாா். ஆனால், முழுத்தொகையை திருப்பித் தரவில்லை எனக்கூறி பணம் கொடுத்த நபா் அடியாட்களைக் கொண்டு மிரட்டுவதுடன், கோதண்டனின் குடும்ப அட்டை, ஆதாா், ஏடிஎம் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், வீடு, நிலப்பத்திரம், மோட்டாா் பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வைத்துள்ளாராம்.

இதனால், பாதிக்கப்பட்ட கோதண்டன், வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா். அதில், கந்துவட்டி கேட்டு மிரட்டுவதுடன், வீடு, நிலப்பத்திரங்கள், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து வைத்துள்ள நபா் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரிடம் உள்ள தனது பத்திரங்கள், பொருட்கள், வாகனத்தையும் மீட்டுத்தர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா்.

மனுவை பெற்றுக்கொண்ட காவல் துறையினா், இப்புகாா் மீது விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT