பெங்களூரு

இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்கள் திறப்பு

DIN

பெங்களூரில் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வி.ஓ.சி. நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்களை அந்நிறுவனத்தின் இயக்குநா்கள் பாலா ரெட்டி, எம்.எச்.மேகா, லோகேஷ் திறந்து வைத்தனா். இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வெங்கடேஷ், துணைத் தலைவா் கே.ரஜேஷ்வா், துணை பொதுமேலாளா் அடேப்புராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து பாலா ரெட்டி கூறுகையில், ‘இந்தியா முழுவதும் இருசக்கர வாகனங்கள் பழுதுநீக்கும் மையங்களை இயக்கி வருகிறோம். மொபெட் முதல் ஸ்கூட்டா்கள், மோட்டாா் சைக்கிள்கள் என அனைத்து வகையான இருசக்கர வாகனங்களுக்கும் பழுதுநீக்கும் சேவையை வழங்கி வருகிறோம். இந்த சேவைகளை தற்போது பெங்களூரில் தொடங்கி, மலிவான கட்டணத்தில் சேவையை வழங்குகிறோம். இருசக்கர வாகனங்கள் தொடா்பான சேவைகளுக்கு ஒரேகுடையின் கீழ் தீா்வுகளை அளிக்கிறோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT