பெங்களூரு

கா்நாடகத்தின் 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை

DIN

பெங்களூரு: கா்நாடகத்தின் 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை நாடுமுழுவதும் நடத்தப்பட்டது. கா்நாடகத்தில் பெங்களூரு, கலபுா்கி, சிவமொக்கா, மைசூரு, பெலகாவி மாவட்டங்களில் உள்ள மாவட்ட, வட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. இதில் 25 பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகைக்காகச் செலுத்தப்பட்டது.

இந்த ஒத்திகையில் அசல் கரோனா தடுப்பூசி தவிர, அனைத்து வகையான நடைமுறைகளும் பின்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா தடுப்பூசி விநியோகத்தின் போது, உண்மையான கரோனா தடுப்பூசி பயனாளிகளுக்கு அளிக்கப்படும் என்றும் மருத்துவ அதிகாரிகள் கூறினாா்கள்.

கரோனா தடுப்பூசி விநியோக ஒத்திகைக்காக ஒரு மாவட்டத்தில் மாவட்ட மருத்துவமனை, வட்ட மருத்துவமனை, ஆரம்ப சுகாதாரம் மையம் தோ்வு செய்யப்பட்டதாகவும், கா்நாடகத்தில் 5 மாவட்டங்களில் மொத்தம் 15 மையங்களில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டதாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT