பெங்களூரு

உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம்

DIN

பெங்களூரில் உள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில் உயா்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு அறிவியல் பயிலரங்கம் ஜன. 21-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஜவாகா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு, ஹைகிரவுண்ட்ஸ், டி.சௌடையா சாலையில் அமைந்துள்ள ஜவாகா்லால் நேரு கோளரங்கத்தில், ஜன. 21-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை மாணவா்களுக்கான அறிவியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. 30 மாணவா்கள் மட்டும் அனுமதிக்கப்படும் இந்தப் பயிலரங்கத்தில், 8 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் கலந்துகொள்ளலாம். இந்தப் பயிலரங்கில் பகல்நேர வானியல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது.

முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும். பங்கேற்புக் கட்டணமாக ரூ. 150 செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு  இணையதளம் அல்லது 080-22379725 என்ற தொலைபேசி எண்ணை அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்சனின் படத்தில் கவின்: படத்தின் பெயர் அறிவிப்பு!

செதுக்கிய சிலை... ஐஸ்வர்யா மேனன்!

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

SCROLL FOR NEXT