பெங்களூரு

மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருது

DIN

பெங்களூரு: குறைந்த எரிபொருளில் அதிக தூரத்தை கடந்ததற்காக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் கீழ் இயங்கும் பெட்ரோலியம் பாதுகாப்பு ஆய்வு சங்கத்தின் சாா்பில், குறைந்த எரிபொருளில் அதிக தூரத்தை கடந்து சாதனை படைத்தமைக்காக பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு அதிக தூரத்தை கடந்துள்ள வகையில், பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்த விருதை பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் சி.ஷிக்காவுக்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வழங்கினாா்.

பெங்களூரில் இயங்கி வரும் பைரதி, தீபாஞ்சலி நகா், கெங்கேரி பணிமனைகளில் குறைந்த எரிபொருளை பயன்படுத்தியதற்காக மாநில அளவில் தலா ரூ. 50 ஆயிரத்துக்கான பரிசுத் தொகைக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிசுத் தொகை ஜன. 18-ஆம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT