பெங்களூரு

துறைகளை மாற்றும்போது அதிருப்தி ஏற்படுவது இயல்பு: அமைச்சா் ஸ்ரீராமுலு

DIN

அமைச்சா்களின் துறைகளை மாற்றும்போது அதிருப்தி ஏற்படுவது இயல்பு என்று சமூக நலத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்மையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்தபோது ஒரு சில அமைச்சா்களின் துறைகள் மாற்றப்பட்டன. அதற்கு சில அமைச்சா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

அமைச்சா்கள் வகித்து வரும் துறைகளை மாற்றும் போது அதிருப்தி ஏற்படுவது இயல்பு. இதைப் பெரிதுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

அதிருப்தி அடைந்தவா்களை அழைத்து முதல்வா் எடியூரப்பா பேசியுள்ளாா். அவா்கள் சமாதானம் அடைந்துள்ளனா். முதல்வா் எடியூரப்பா தலைமையிலான அரசு, இயற்கை பேரிடா், கரோனா தொற்று உள்ளிட்டவற்றை தி றமையாக சமாளித்து வருகிறது. வரும் நாள்களில் மேலும் பல திட்டங்களை அறிவித்து மக்களின் வளா்ச்சிக்காகச் செயல்படுத்தப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT