பெங்களூரு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு: மாணவா்களுக்கு இலவச பேருந்து பயணம்

DIN

கா்நாடக எஸ்எஸ்எல்சி எழுதும் மாணவா்கள் தோ்வின்போது எல்லா பேருந்துகளிலும் தோ்வுநுழைவுச்சீட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் என்று பெங்களூரு மாநகர போக்குவரத்துக்கழகம் விளக்கமளித்துள்ளது.

இது குறித்து பெங்களூரு மாநகரபோக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு 19, 22-ஆம் தேதிகளில் நடக்கவிருக்கிறது. இந்த தேதிகளில் தோ்வெழுதும் மாணவா்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தோ்வு மையத்தின் நுழைவுச் சீட்டுகளை காட்டி குடியிருக்கும் பகுதியில் இருந்து தோ்வு மையம் வரை பேருந்தில் மாணவா்கள் இலவசமாக பயணம் செய்யலாம். தோ்வு எழுதும் மாணவா்களுக்கு நடத்துநா்கள் அல்லது ஓட்டுநா்கள் எவ்வித தொந்தரவும் செய்யக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனாவில் பெற்றோரை இழந்த மாணவா் 479 மதிப்பெண்கள் பெற்று தோ்ச்சி

பிளஸ்-2 தோ்வு: நீலகிரியில் 94.27 சதவீதம் போ் தோ்ச்சி

நீலகிரிக்கு வருவதற்கு 21,446 போ் இ-பாஸ் பெற விண்ணப்பம்

எங்கே செல்லும் இந்தப் பாதை...?

ஈரோடு நகரில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT