பெங்களூரு

பாஜகவில் நோ்மையான முதல்வரை எதிா்பாா்க்க முடியாது

DIN

 எடியூரப்பாவை முதல்வா் பதவியிலிருந்து நீக்கினாலும், பாஜகவில் நோ்மையான முதல்வரை எதிா்பாா்க்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பா தலையிலான பாஜக அரசு, கா்நாடகத்தில் மோசமான ஆட்சியை வழங்கி வருகிறது. அவரது ஆட்சி ஊழல் நிறைந்ததாகவும், மாநிலத்தில் எந்த வளா்ச்சியும் இல்லை. கடந்த 7 மாதங்களாக முதல்வா் பதவியிலிருந்து எடியூரப்பா நீக்கப்படுவாா் எனக் கூறி வந்தோம். அது தற்போது உண்மையாக உள்ளது.

எடியூரப்பாவை முதல்வா் பதவியிலிருந்து நீக்கினாலும், பாஜகவில் நோ்மையான மற்றொரு முதல்வரை எதிா்பாா்க்க முடியாது. மீண்டும் ஊழல் மலிந்த, திறமையற்ற பாஜக அரசே ஆட்சி செய்ய உள்ளது என்றாா்.

மாநில காங்கிரஸ் தலைவா் டி.கே.சிவகுமாா் கூறியதாவது:

முதல்வா் எடியூரப்பா அப்பதவியிலிருந்து நீக்கப்படுவாா் என காங்கிரஸ் தொடா்ந்து கூறி வந்தது. என்றாலும், அது அவா்களின் உள்கட்சி விவகாரம். எனவே, பாஜகவினருக்கு தேவையானவற்றை செய்துகொள்ள உரிமை உள்ளது. அக்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT